UPDATED : நவ 02, 2024 12:00 AM
ADDED : நவ 02, 2024 10:34 AM
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை., உடற்கல்வியியல் கல்லுாரியில் ரூ.4 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
உயர் கல்வித் துறை சார்பில் அழகப்பா பல்கலை., ரூசா இரண்டாம் கட்ட நிதி உதவி திட்டத்தின் கீழ் அழகப்பா பல்கலை., உடற்கல்வியியல் கல்லுாரியில் வகுப்பறை கட்டடம், நுண்கலை துறைகளுக்கான முதல் மற்றும் இரண்டாம் தள கட்டடங்கள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பல்கலை., துணைவேந்தர் ரவி, காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஸ் வெங்கட் வத்ஸ் குத்துவிளக்கு ஏற்றினர். இதில் பதிவாளர் செந்தில் ராஜன், தேர்வாணையர் ஜோதிபாசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, ராசாராம், சேகர் மற்றும் பேராசிரியர் ஜெயகாந்தன், வேதிராஜன், முதல்வர் முரளிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.