மேல்மருவத்துாரில் சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை துவக்கம்
மேல்மருவத்துாரில் சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை துவக்கம்
UPDATED : ஏப் 25, 2024 12:00 AM
ADDED : ஏப் 25, 2024 10:19 AM

செங்கல்பட்டு:
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பல் மருத்துவமனை வளாகத்தில், சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டது.
இம்மருத்துவமனை திறப்பு விழா, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லுாரி தாளாளர் டாக்டர் ரமேஷ் தலைமையில், நேற்று நடந்தது. டாக்டர் சேதுகிருஷ்ணா, சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆதிபராசக்தி குழுமப் பள்ளிகளின் தாளாளர் ஸ்ரீதேவி ரமேஷ் குத்துவிளக்கு ஏற்றி, மருத்துவமனையை திறந்து வைத்து பேசியதாவது:
பங்காரு அடிகளார் அருளிய இயற்கை மருத்துவத்தின் அடையாளமாகத் துவக்கப்பட்டுள்ள சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை, ஆன்மிகத்தின் பாரம்பரியமும், ஆயுர்வேதத்தின் சிறப்பியல்களும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லுாரி தாளாளர் டாக்டர் ரமேஷ் பேசியதாவது:
பங்காரு அடிகளார் முதன் முதலில் மருத்துவமனை துவங்கிய அதே இடத்தில், சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில், நவீன மருத்துவத்தின் சிறப்புகளோடு செயல்பட்டு, மக்களுக்கு நல்ல சிகிச்சையும், ஆரோக்கியத்தையும் கொடுக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், ஆதிபராசக்தி மருத்துவமனை, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, செவிலியர் கல்லுாரி, பிஸியோதெரபி கல்லுாரிகளைச் சேர்ந்த முதல்வர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.