UPDATED : மே 09, 2025 12:00 AM
ADDED : மே 09, 2025 08:29 AM
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு, 112 பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன. இந்தாண்டு இது, 122 ஆக உயர்ந்துள்ளது.
மெட்ரிக் பள்ளிகளை பொறுத்தவரை, கடந்தாண்டு, 93 பள்ளிகளும், இந்தாண்டு, 99 பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. கடந்த முறை இரண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளும், இம்முறை மூன்று அரசு உதவி பெறும் பள்ளிகளும் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
கடந்தாண்டு, 100 சதவீத தேர்ச்சி பெற்ற, தளவாய்பட்டணம், குண்டடம், புதுப்பை, வடுகப்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மூலனுார், எஸ்.முருகப்பா பள்ளி, சூரியப்பம்பாளையம், கானுார்புதுார் ஆகிய பள்ளிகள் மீண்டும் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது. இதேபோல, நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற தாராபுரம் என்.சி.பி., நகராட்சி மேல் நிலைப்பள்ளியும், இந்தாண்டு நுாறு சதவீத தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது.
அதேநேரம், கடந்த முறை நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற, உத்தமபாளையம், அலங்கியம், குளத்துப்பாளையம், கொடுவாய், குன்னத்துார், சரவணபுரம், ஜல்லிபட்டி, தேவனுார்புதுார், பெரியவாளவாடி ஆகிய பள்ளிகள் இம்முறை நுாறு சதவீத தேர்ச்சியை தரவில்லை. மாணிக்கசுவாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, கோவிந்தபுரம், சாந்தி நிகேதன் ஆகிய இரு அரசு உதவி பெறும் பள்ளிகள், இந்தாண்டும் சென்டம் ரிசல்ட் பெற்றது.
இப்பட்டியலில் கூடுதலாக, வி.எம்.சி.டி.வி., தாயம்பாளையம் பள்ளி இணைந்ததால், நடப்பாண்டு, நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், எட்டு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் உள்ள போதும் கடந்தாண்டு ஒரு பள்ளி கூட நுாறு சதவீத தேர்ச்சி பெறவில்லை.
இக்குறையை நடப்பாண்டு போக்கியுள்ளது, புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் தேர்வெழுதிய, 150 மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். இதனால், நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற ஒரே மாநகராட்சி பள்ளியாக இப்பள்ளி பாராட்டு பெறுகிறது.

