UPDATED : மே 09, 2025 12:00 AM
ADDED : மே 09, 2025 08:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின. மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள கல்லுாரிகளின் தரநிலை.
கட்டமைப்பு வசதிகள், கட்டணம், போன்ற விபரங்களையும், உதவித்தொகை, கல்விக்கடன் பெறுவது எப்படி, கல்லுாரிகளில் சேர விண்ணப்பிப்பது எப்படி என அனைத்து விபரங்களையும், 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
பெற்றோரும் தங்கள் சந்தேகங்களுக்கு, தொடர்பு கொள்ளலாம். உயர்கல்வி தொடர்பான அனைத்து விபரங்களுக்கும், காலை 8:00 முதல், இரவு 8:00 மணி வரை, தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

