தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விண்வெளித் துறையில் இந்தியா சாதனை; பிரதமர் மோடி பெருமிதம்

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை; பிரதமர் மோடி பெருமிதம்

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை; பிரதமர் மோடி பெருமிதம்


UPDATED : ஆக 23, 2026 04:41 PM

ADDED : ஆக 23, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 04:41 PM ADDED : ஆக 23, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
விண்வெளி துறையில் இந்தியா அதிக சாதனைகளை படைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் 20 விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்பொழுது விவசாயம், கால்நடை மேலாண்மை, பால்வளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளுக்கு விண்வெளித் தொழில்நுட்பம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராயுமாறு, இந்தியாவின் விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும், தொழில்முனைவோரையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:


இந்தியாவின் விண்வெளித் துறையில் அதாவது, சவால்கள் நிறைந்த ஒரு புதிய துறையில் துணிச்சலுடன் களமிறங்கியுள்ள இளம் தொழில்முனைவோர்களை சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. அவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளை நம்பி, தங்கள் முயற்சிகளில் தளராத உறுதியுடன் செயல்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் விண்வெளித் துறையில் இந்தியா பெரும் சாதனைகளைப் புரிந்துள்ளதோடு, குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கண்டுள்ளது. இந்தத் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் பணிகள் குறித்த பயனுள்ள விளக்கங்களை அளித்தன. விண்வெளித் துறையில் அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களையும், அத்துறையில் அவர்கள் மேலும் வளர்ச்சியடைய அந்தச் சீர்திருத்தங்கள் எவ்வாறு ஊக்கமளித்தன என்பதையும் பாராட்டினர்.

எதிர்காலத்திற்கான இந்தியாவின் திறன்களை வளர்த்தெடுக்கும் இவர்களின் பயணத்தில், மத்திய அரசு தொடர்ந்து உறுதுணையாக நிற்கும் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன். விண்வெளித் துறையில் புதுமையான மற்றும் வணிக ரீதியாக புதிய படைப்புகளை உலகிற்கு வழங்க இந்தியா வல்லமை பெற்றுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us