தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சொந்தமாக சிறந்த ஏ.ஐ., மாடலை இந்தியா உருவாக்கும்; மத்திய அமைச்சர் உறுதி

சொந்தமாக சிறந்த ஏ.ஐ., மாடலை இந்தியா உருவாக்கும்; மத்திய அமைச்சர் உறுதி

சொந்தமாக சிறந்த ஏ.ஐ., மாடலை இந்தியா உருவாக்கும்; மத்திய அமைச்சர் உறுதி


UPDATED : ஜன 31, 2025 12:00 AM

ADDED : ஜன 31, 2025 01:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2025 12:00 AM ADDED : ஜன 31, 2025 01:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
உலகின் மிகச்சிறந்த ஏ.ஐ., மாடலை, இன்னும் 8 முதல் 10 மாதங்களில் இந்தியா உருவாக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

டீப்சீக் என்ற இரண்டு ஏ.ஐ., மாடல்களை குறைந்த செலவிலான சேவையாக சீனா அறிமுகம் செய்தது. டீப்சீக் ஏ.ஐ., மாடல்களின் போட்டியால், அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ., என்விடியா ஆகிய நிறுவனங்கள் சந்தையில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில் ஏ. ஐ., தொழில்நுட்பம் குறித்து ஒடிசாவில் நடந்த மாநாட்டில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

உலகின் மிகச்சிறந்த ஏ.ஐ., மாடலை, இன்னும் 8 முதல் 10 மாதங்களில் இந்தியா உருவாக்கும். ரூ.10,370 கோடி மதிப்பிலான இந்தியா ஏஐ திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டின் சிறந்த ஏ.ஐ., மாடலை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவது, நமது பிரதமரின் திட்டம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா மிகப் பெரிய மைல்கல்லை அடையும். ChatGPT, DeepSeek போன்ற ஏ.ஐ., தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

ஏ.ஐ., தொழில்நுட்பத்திற்கான மாதிரி ஏற்கனவே அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஏ. ஐ., ஸ்டார்ட் அப்கள், டெவலப்பர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கும் பொதுவான கணினி வசதியையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஏ.ஐ., மாடலை அறிமுகப்படுத்த ஆறு முக்கிய டெவலப்பர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us