தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விசி தேடல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி; கவர்னர் ரவி மீண்டும் வலியுறுத்தல்

விசி தேடல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி; கவர்னர் ரவி மீண்டும் வலியுறுத்தல்

விசி தேடல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி; கவர்னர் ரவி மீண்டும் வலியுறுத்தல்


UPDATED : ஜன 31, 2025 12:00 AM

ADDED : ஜன 31, 2025 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2025 12:00 AM ADDED : ஜன 31, 2025 01:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் தேடல் குழுவில், யு.ஜி.சி., பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என கவர்னர் ரவி வலியுறுத்தி உள்ளார்.

கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை:

மதுரை காமராஜர் பல்கலை வேந்தரான கவர்னர் ரவி, பல்கலைக்கு துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழு அமைத்தார்.

பல்கலை சட்டம், 1965 மற்றும் யு.ஜி.சி., விதிமுறைகள், 2018க்கு உட்பட்டு, வேந்தர், பல்கலையின் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் மற்றும் யு.ஜி.சி தலைவரின் பரிந்துரையாளர் ஆகியோர், குழுவில் இடம் பெற்றிருந்தனர். இந்த விபரத்தை, அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக, கடந்த, 9ம் தேதி, உயர்கல்வித்துறை சார்பில், தேடுதல் குழு நியமிக்கப்பட்டு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் யு.ஜி.சி., பரிந்துரையாளர் பெயர் இடம் பெறவில்லை. கவர்னர் அனுப்பிய பட்டியலில், எந்த வகையிலும் விதிமீறல் இல்லை.

எனவே, யு.ஜி.சி., பரிந்துரையாளரை சேர்த்து, காமராஜர் பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைக்க வேண்டும். தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என, கவர்னர் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us