இந்தியாவின் பொருளாதாரம் 6.6 சதவீதமாக வளர்ச்சி அடையும்: ஐ.எம்.எப்., கணிப்பு
இந்தியாவின் பொருளாதாரம் 6.6 சதவீதமாக வளர்ச்சி அடையும்: ஐ.எம்.எப்., கணிப்பு
UPDATED : அக் 25, 2025 09:53 AM
ADDED : அக் 25, 2025 09:56 AM

புதுடில்லி:
“2025ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும்” என சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.,) கணித்துள்ளது.
இது குறித்து சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.,) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருந்து வருகிறது. 2025ம் நிதியாண்டில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும். உலகில் மிகவும் வேமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கிறது.
2025ம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சியை 3.2% ஆகவும், அடுத்த ஆண்டில் 3.1% ஆகவும் குறையும். இந்தியா சீனாவை விட வேகமாக முன்னேற உள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.8% ஆக இருக்கும்.
உலகளவில் பணவீக்கம் தொடர்ந்து குறையும். ஸ்பெயின் பொருளாதாரம் 2.9% என்ற விகிதத்தில் வளர்ச்சி அடையும். அமெரிக்காவும் 1.9% வளர்ச்சி அடையும். பிரேசிலின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆகவும், கனடாவின் பொருளாதார வளர்ச்சி 1.2% ஆகவும், ஜப்பான் பொருளாதார வளர்ச்சி 1.1% ஆகவும் இருக்கும்.
உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, குறிப்பாக விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற ஊதிய வளர்ச்சி, எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2026ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, 2026ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக வளர்ச்சி அடையும் என உலக வங்கி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

