தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ அமெரிக்காவில் இந்திய மாணவி பரிதாப பலி

அமெரிக்காவில் இந்திய மாணவி பரிதாப பலி

அமெரிக்காவில் இந்திய மாணவி பரிதாப பலி


UPDATED : டிச 16, 2024 12:00 AM

ADDED : டிச 16, 2024 03:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2024 12:00 AM ADDED : டிச 16, 2024 03:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கணேஷ் - ரமாதேவி ஆகியோரின் மகள் நாக ஸ்ரீ வந்தனா பரிமளா. இவர், கடந்த 2022ம் ஆண்டு உயர் படிப்பிற்காக அமெரிக்காவில் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில் உள்ள பல்கலையில் படிக்க சென்றார்.

பரிமளா, அடுத்த ஆண்டு தன் படிப்பை நிறைவு செய்தபின் அங்குள்ள நிறுவனத்தில் பணியாற்ற திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில், பரிமளா நேற்று முன்தினம், தன் நண்பர்களுடன் காரில் அருகில் உள்ள பகுதிக்கு சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வேகமாக சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பரிமளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் சென்ற பவன் மற்றும் நிகித் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் மீட்புக்குழுவினர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us