சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு பிப்., 15 முதல் துவக்கம்
சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு பிப்., 15 முதல் துவக்கம்
UPDATED : டிச 16, 2024 12:00 AM
ADDED : டிச 16, 2024 11:36 AM

போடி :
தமிழக அளவில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சார்பில் சுருக்கெழுத்து, தட்டச்சு, வணிகவியல் தேர்வு, பிப்.,15 முதல் துவங்கப்படும்.' என, அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
இந்த இயக்குனரகம் சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்டில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகவியல் தேர்வுகள் நடைபெறும்.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றவர்கள், டி.என்.பி.எஸ்.சி., மூலம், குரூப் 4 தேர்வு எழுதி எளிதில், கட் ஆப் மதிப்பெண்கள் மூலம் வேலைவாய்ப்பை பெறலாம் என்பதால் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
வரும் 2025 பிப்ரவயில் துவங்க உள்ள சுருக்கெழுத்து, தட்டச்சு, வணிகவியல் தேர்வுக்கு டிச., 16 முதல் 2025 ஜன., 17 வரை www.tndtegteonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சுருக்கெழுத்து உயர்வேக தேர்வு 2025 பிப்., 15, 16; இளநிலை, முதுநிலை தேர்வு பிப்., 22, 23; வணிகவியல் இளநிலை, முதுநிலை தேர்வு பிப்.,24; தட்டச்சு இளநிலை, முதுநிலை, முதுநிலை உயர் வேகம் மார்ச் 1, 2ம் தேதிகளில் நடக்க உள்ளது.
இதற்கான தேர்வு முடிவுகள், மே 6ல் வெளியாகும் என, அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.