ஆட்டோமேஷன் துறையில் முன்னணி ஆப் வியூ எக்ஸ் நிறுவனர் தகவல்
ஆட்டோமேஷன் துறையில் முன்னணி ஆப் வியூ எக்ஸ் நிறுவனர் தகவல்
UPDATED : பிப் 28, 2025 12:00 AM
ADDED : பிப் 28, 2025 10:33 AM
கோவை:
ஆட்டோமேஷன் துறையில் முன்னணி இடம் பிடித்துள்ள நிலையில் கோவையில் அதிக முதலீடு செய்ய உள்ளோம் என ஆப் வியூ எக்ஸ் நிறுவனர் ஆனந்த் புருஷோத்தமன் கூறினார்.
கோவையை சேர்ந்த ஆப் வியூ எக்ஸ் நிறுவனர் ஆனந்த் புருஷோத்தமன், தனியார் ஓட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், சைபர் பாதுகாப்பு என்பது உலகளவில் சவாலாக இருந்து வருகிறது. இச்சூழலில் தொழில் நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றின் தரவுகளை பாதுகாக்கும் வலுவான தொழில்நுட்பங்களுடன், இங்கு திறமையான பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறோம். தற்போது, அமெரிக்கா, லண்டன் அடுத்து கோவை, பெங்களூருவில் சிறப்பு மையங்கள் அமைத்துள்ளோம்.
விரிவாக்கத்தை அடுத்து இந்தியாவில் குறிப்பாக கோவையில் முதலீடுகளை அதிகரிக்க உள்ளோம். இதனால், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார்.
ஆப் வியூ எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி டினோ டிமாரிடேனா கூறுகையில்,ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகளவில் அத்தியாவசியமாக மாறிவருகிறது. இச்சூழலில் எங்கள் நிறுவனம் மனிதர் அல்லாத அடையாள மேலாண்மையில் முன்னணி வகிக்கும், என்றார்.
தலைமை வாடிக்கையாளர் அதிகாரி பிரபாகர் மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.