சி.பி.எஸ்.இ., பாட திட்டம் குறித்த பயிற்சி துவக்கம்
சி.பி.எஸ்.இ., பாட திட்டம் குறித்த பயிற்சி துவக்கம்
UPDATED : ஏப் 30, 2024 12:00 AM
ADDED : ஏப் 30, 2024 09:45 AM

புதுச்சேரி:
அரசு பள்ளி முதல்வர், துணை முதல்வர்களுக்கு சி.பி.எஸ்.இ., பாட திட்டம் குறித்த5 நாள் பணியிடை பயிற்சி நேற்று துவங்கியது.
புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாட திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளளது. சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டு செல்ல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி அளிக்க டெண்டர் விடப்பட்டது. அதில், மாக் மில்லன் என்ற நிறுவனம் தேர்வானது.
இந்நிறுவனம் மூலம் முதற்கட்டமாக பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு மற்றும் மேலாண்மை தொடர்பான பயிற்சி நேற்று துவங்கியது. பள்ளி கல்வித்துறை அரங்கில் துவங்கிய நிகழ்ச்சியில், கல்வித்துறை செயலர் ஆஷிஷ் மாதவ் ராவ்மோரே, பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி துவக்கி வைத்தனர்.
துணை இயக்குநர் சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர்கள் நிலை 2க்கு இன்று துவங்கி 4ம் தேதி வரை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி நடக்கிறது.