100 மாணவர்களுக்கு புத்தாக்க கண்டுபிடிப்புக்கான முகாம்
100 மாணவர்களுக்கு புத்தாக்க கண்டுபிடிப்புக்கான முகாம்
UPDATED : ஆக 10, 2024 12:00 AM
ADDED : ஆக 10, 2024 09:20 AM
ஈரோடு:
ஈரோட்டில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்-தாக்க கண்டுபிடிப்புகளுக்கு உருவளிக்கும் முகாமை, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் துவக்கி வைத்தார்.
பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களிடம் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைதல் சிந்தனையை உருவாக்கும் வகையில், பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. ஆண்டு தோறும் உயர்கல்வி பயிலும் மாணவர்களிடையே புத்தாக்க கண்டுபிடிப்பு
போட்டிகள் நடத்தி, சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கி வருகிறது. இந்தாண்டு இப்போட்டிக்கான விண்ணப்பம், 9,355 மாணவர் அணிகளிடம் இருந்து பெறப்பட்டு, முதற்கட்ட ஆய்வுக்கு பின், 474 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த அணிக்கு ஒரு நாள் புத்தாக்க கண்டுபிடிப்புக-ளுக்கு உருவளிக்கும் முகாம், 17 மாவட்டங்களில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, 26 அணிகளுக்கான முகாம் இங்கு நடத்தப்படுகிறது. இம்முகாமில், 26 அணி-களில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள், தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள், வாய்ப்புகள், மானியங்கள் பற்றி விளக்கினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா உட்பட பலர் பங்கேற்றனர்.