தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க அறிவுறுத்தல்

மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க அறிவுறுத்தல்

மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க அறிவுறுத்தல்


UPDATED : அக் 08, 2026 05:45 PM

ADDED : அக் 08, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 05:45 PM ADDED : அக் 08, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரமரிக்கப்பட வேண்டிய வகுப்பறை கட்டடங்கள், சுற்றுச்சுவர், குடிநீர், மின்சாரம், கழிப்பறை மற்றும் உணவுக்கூடங்கள், மாணவர்களுக்கான அமர்விடங்கள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி வளர்ச்சி குறித்து, மாவட்ட கலெக்டர் சரவணன், ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அறிவுறுத்தினார். மேலும், பள்ளி வளாகத்தை சுத்தமாகவும் துாய்மையாகவும் வைத்து கொள்ளவும், மாணவர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில், காரிமங்கலம் தாசில்தார் சிவக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us