பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற அறிவுறுத்தல்: மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்
பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற அறிவுறுத்தல்: மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்
UPDATED : நவ 06, 2025 07:41 AM
ADDED : நவ 06, 2025 07:42 AM

கோவை:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, தொடர் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 148 பள்ளிகளில், 11 உயர்நிலை மற்றும் 17 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,640 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 1,557 பேர் தேர்ச்சி பெற்று, 94.94 சதவீதம் தேர்ச்சி பதிவானது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதமும், 7.58 சதவீதம் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், 2025-2026 கல்வியாண்டில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க, 100 சதவீத தேர்ச்சிக்கு, மாநகராட்சி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுடன், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டங்களில், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலை, வகுப்பு தேர்வுகளில் அவர்களின் செயல்பாடு, காலாண்டு மற்றும் பருவ தேர்வுகளில் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் ஆகியவை குறித்து, விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கொஞ்சம் முன்னாடியே சொன்னால் நல்லாருக்கும்! ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் நாள் குறித்து, தங்களுக்கு முன்கூட்டியே அறிவித்தால், அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பாக அமையும் என, ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அடிக்கடி லீவு
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறு கையில், ''100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட, மாணவர்களின் கற்றல் நிலையை அதிகரிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக, வகுப்பிற்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு பி.எல்.ஓ., தேர்தல் பணிகளில் அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனால் மாணவர்களின் கல்விக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
கொஞ்சம் முன்னாடியே சொன்னால் நல்லாருக்கும்!
ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் நாள் குறித்து, தங்களுக்கு முன்கூட்டியே அறிவித்தால், அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பாக அமையும் என, ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

