UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM
ADDED : ஜூன் 04, 2025 08:20 AM

தமிழக அரசின் கீழ், சென்னையில் இயங்கும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத்தில் உள்ள இ.டி.ஐ.ஐ., நிறுவனத்துடன் இணைந்து சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.
படிப்பு: 
தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பு
படிப்பு காலம்:
 ஓர் ஆண்டு
முக்கியத்துவம்: 
தொழில்முனைவோர் பண்புகள், முடிவெடுக்கும் திறன்களை வளர்த்தல், ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதில் நிபுணத்துவம் பெறுதல் மற்றும் ஒரு நிறுவனத்தை நிலையான முறையில் நிர்வகித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இப்படிப்பு வழங்கப்படுகிறது. புதிய தொழிலை துவங்க உதவுதோடு, அரசு சலுகைகள் மற்றும் நிதி உதவி பெறவும் இந்நிறுவனம் வழிகாட்டுகிறது.
பாடத்திட்டம்: 
வணிக வாய்ப்புகளை அடையாளம் காணுதல் மற்றும் வழிகாட்டுதல் சந்தை மதிப்பீடு, திட்ட அறிக்கை தயாரித்தல், ஸ்டார்ட்-அப் மேலாண்மை மற்றும் வணிகத்தை செயல்படுத்துதல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. 
தகுதி: 
ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்ற 12ம் வகுப்பு / ஐ.டி.ஐ., அல்லது டிப்ளமா படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி கட்டணம்:
 ரூ.80 ஆயிரம். பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக முழு கல்வி கட்டணத்திற்கும் வங்கிக் கடன் பெற முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: 
https://editn.in/Web-One-Year-Registration எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
 ரூ. 500
விண்ணப்பிக்க கடைசி நாள்: 
ஜூலை 15 
விபரங்களுக்கு:
 https://editn.in/

