UPDATED : அக் 02, 2026 06:14 PM
ADDED : அக் 02, 2026 06:15 PM
கோவை:
குளோபல் டிசைன் திங்கிங் அலையன்ஸ் (ஜி.டி.தி.ஏ.,) இந்தியப் பிரிவு மற்றும் எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள் சார்பில் சர்வதேச வடிவமைப்பு சிந்தனை மாநாடு 'டி கான்பிரன்ஸ் 26' எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது.
'குழப்பமும் தெளிவும்' என்ற பொருளில் நடந்த மாநாட்டில், சிக்கலான பிரச்னைகளுக்கு மனிதனை மையமாகக் கொண்ட புத்தாக்கத் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 11 நாடுகளைச் சேர்ந்த, 23 சர்வதேச பேச்சாளர்கள், 20 இந்திய பேச்சாளர்கள் பங்கேற்றனர்.
கல்வி மாற்றம், தொழில்துறை புத்தாக்கம், ஏ.ஐ., காலத்தில் வடிவமைப்பு, சமூக தாக்கம் குறித்து அமர்வுகள் நடந்தன. ஜி.டி.தி.ஏ., ஹேக்கத்தான் போட்டியில் சிறந்த மாணவர் யோசனைகளுக்கு விருது வழங்கப்பட்டன. அடிப்படை உயிர்காக்கும் உதவி விழிப்புணர்வுக்காக 'எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாளில் எதிர்கால வடிவமைப்பு, 2030க்கான போக்குகள், பூர்வீக அறிவை ஏ.ஐ., உடன் இணைத்தல் குறித்த பயிலரங்குகள் நடந்தன. 'இன்னோவேஷன் சபாரி', 'கோயம்புத்தூர் காலா நைட்ஸ்' நிகழ்ச்சிகள் நடந்தன. அடுத்த ஆண்டு 'ஜி.டி.தி.ஏ.டி., கான்பிரன்ஸ் 2027' நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
