UPDATED : அக் 02, 2026 06:13 PM
ADDED : அக் 02, 2026 06:14 PM
விருத்தாசலம்:
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த பெரியகண்டியங்குப்பத்தில், என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் துவக்க விழா, கடந்த 26ம் தேதி நடந்தது. அதன்படி, மாரியம்மன் கோவிலில் உழவாரம், சாலை சீரமைப்பு பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். பின்னர், மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு, சேமிப்பும் சிக்கனமும் ஆகிய தலைப்புகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மேலும், இயற்கை விவசாயம், தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சியும், டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நேற்று 6ம் நாளாக, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துாய்மைப் பணி நடந்தது. தலைமை ஆசிரியர் வினோத்குமார் துவக்கி வைத்தார்.
அதில், பள்ளி வளாகத்தில் குப்பைகள், செடி கொடிகள் அகற்றப்பட்டன. திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், உதவி திட்ட அலுவலர் ராஜராஜசோழன் உடனிருந்தனர்.
