பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வகுப்பு துவங்கியது
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வகுப்பு துவங்கியது
UPDATED : ஆக 02, 2026 12:36 PM
ADDED : ஆக 02, 2026 12:37 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரி 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி வகுப்புகள் துவங்கியது.
ரானே ஸ்டீயரிங், ஹூண்டாய், மதர்சன் உட்பட பல்வேறு எம்.என்.சி., தொழில் நிறுவனங்களில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி வகுப்பு மூலம் தொழில் சார்ந்த நடைமுறை அனுபவம். நவீன தொழில்நுட்ப அறிவு, வேலை வாய்ப்பிற்கு தேவையான திறன்களை நேரடியாக பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.
பயிற்சியின் போது மாணவர்களுக்கு மாதம் 22 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுவதால், பயிற்சியுடன் வருமானம் பெறவும் வாய்ப்பு அமைந்துள்ளது.
மாணவர்களின் தொழில் முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த சிறப்பு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகவலை கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா தெரிவித்துள்ளார்.
