தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி.இ.டி., கல்லுாரியில் தொழில்நுட்ப விழா

வி.இ.டி., கல்லுாரியில் தொழில்நுட்ப விழா

வி.இ.டி., கல்லுாரியில் தொழில்நுட்ப விழா


UPDATED : ஆக 02, 2026 12:35 PM

ADDED : ஆக 02, 2026 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2026 12:35 PM ADDED : ஆக 02, 2026 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு அருகேயுள்ள திண்டல் வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'டெக்கிரிதி - 26' என்ற தலைப்பில், மாநில அளவிலான தொழில் நுட்ப விழா நடந்தது.

இதில் கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பல்வேறு தொழில்நுட்ப போட்டி நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் நல்லசாமி வரவேற்றார். வேளாளர் கல்வி அறக்கட்டளை நிர்வாகி பாலசுப்ரமணியன் தலைமை உரையாற்றினார். கல்லுாரி புல முதன்மையர் லோகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் நடந்த போட்டிகளில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, 330க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

போட்டிகளின் முடிவில் அனைத்து நிகழ்வுகளிலும் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்த, ஈங்கூர் ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி 'ஒட்டுமொத்த சாம்பியன்' கோப்பையை கைப்பற்றியது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us