UPDATED : ஆக 03, 2026 03:06 PM
ADDED : ஆக 03, 2026 03:07 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி முருகா பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி வகுப்புகள் துவங்கியது.
கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அனைத்து துறை மாணவர்களுக்கு, ரானே ஸ்டீயரிங், ஹூண்டாய், மதர்சன் போன்ற பல்வேறு எம்.என்.சி., தொழில் நிறுவனங்களில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளது.
பயிற்சியின் மூலம் தொழில் சார்ந்த நடைமுறை அனுபவம், நவீன தொழில்நுட்ப அறிவு, வேலை வாய்ப்பிற்கு தேவையான திறன்களை நேரடியாக பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் இன்டர்ன்ஷிப் பயிற்சியின் போது மாணவர்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுவதால், பயிற்சியுடன் வருமானம் பெறவும் சிறப்பான வாய்ப்பு அமைந்துள்ளது.
மாணவர்களின் தொழில் முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த சிறப்பு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா தெரிவித்துள்ளார்.
