சவீதா பொறியியல் கல்லூரியில் கிரெடிட் திட்டம் அறிமுகம்!
சவீதா பொறியியல் கல்லூரியில் கிரெடிட் திட்டம் அறிமுகம்!
UPDATED : ஆக 14, 2024 12:00 AM
ADDED : ஆக 14, 2024 05:14 PM

சென்னை:
இந்தியாவிலேயே முதன்முறையாக சவீதா பொறியியல் கல்லூரியில் ப்ளெக்ஸி லேர்ன் எனும் கிரெடிட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள சுயாட்சி பெற்ற கல்லூரியான சவீதா பொறியியல் கல்லூரி ப்ளெக்ஸி லேர்ன் என்ற இந்த புதிய திட்டத்திற்காக காப்புரிமையையும் பெற்றிருக்கிறது. மாணவர்களது கல்வி பயணத்தை அவர்களின் விருப்பத்தெரிவுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள நெகிழ்வுத்திறன் கொண்ட ஒரு கிரெடிட் சிஸ்டமாக ப்ளெக்ஸி லேர்ன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ப்ளெக்ஸி லேர்ன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களுடைய முதல் செமஸ்டரிலிருந்தே தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை தெரிவு செய்து கொள்ளலாம். பட்டப்படிப்பு முடிக்கும் போது கூடுதலாக வேறொரு சிறப்புப் பாடத்திட்டத்திலும் பட்டம் பெற்றுக்கொள்ளலாம்.
சவீதா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வீரையன் கூறுகையில், சவீதா பொறியியல் கல்லூரி, ஐபி இந்தியா அமைப்பிடமிருந்து எஸ்.இ.சி ப்ளெக்ஸி லேர்ன் வணிக குறியீட்டை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது, என்றார்.
இக்கல்லூரியின் இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், ப்ளெக்ஸி லேர்ன் வழியாக மாணவர்கள் ஒவ்வொருவருமே அவர்களுக்கென சொந்தமான கல்வி திட்டத்திலும், கால அட்டவணையையும் உருவாக்கிக் கொள்ளலாம். செயல்திட்டங்கள் தொடர்பாக துறைக்குள்ளும் மற்றும் வெவ்வேறு துறைகளுக்கு இடையேயும் கற்றல் அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பை இத்திட்டம் அளிக்கிறது. சிறப்பு பாடங்களாக நிதி, காப்பீடு, வங்கிச்சேவை, உற்பத்தி, லாஜிஸ்டிக்ஸ், பிசினஸ் பகுப்பாய்வு, நிதி தொழில்நுட்பம், மின்-வர்த்தகம், டிஜிட்டல் சந்தை, மொழிகள் (ஜப்பானிய மொழி, ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு), யோகா, நாடகம் மற்றும் வடிவமைப்பு சிந்தனை ஆகியவை உள்ளன. இவற்றிலிருந்து ப்ளெக்ஸி லேர்ன் எனும் கிரெடிட் திட்டம் மூலம் மாணவர்கள் தங்களுடைய பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
மேலும் ஜென்ஏஐ, ஏஐ ஏஜெண்ட்கள், எந்திரக்கற்றல், ஐஐஓடி, ரோபோடிக்ஸ், தானியங்கி வாகனங்கள், டிரோன் தொழில்நுட்பம் மற்றும் சைபர்செக்யூரிட்டி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் செயல்மையங்களை சவீதா பொறியியல் கல்லூரி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.