sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்வி கடனை வசூல் செய்த பின் ஏஜென்சி மூலம் மிரட்டல்: ஐ.ஓ.பி., வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்

/

கல்வி கடனை வசூல் செய்த பின் ஏஜென்சி மூலம் மிரட்டல்: ஐ.ஓ.பி., வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்

கல்வி கடனை வசூல் செய்த பின் ஏஜென்சி மூலம் மிரட்டல்: ஐ.ஓ.பி., வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்

கல்வி கடனை வசூல் செய்த பின் ஏஜென்சி மூலம் மிரட்டல்: ஐ.ஓ.பி., வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்


UPDATED : ஜன 09, 2025 12:00 AM

ADDED : ஜன 09, 2025 08:37 AM

Google News

UPDATED : ஜன 09, 2025 12:00 AM ADDED : ஜன 09, 2025 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:
கல்விக்கடனை முழுமையாக வசூலித்த பின், தனியார் ஏஜென்சி மூலம் மிரட்டல் விடுத்த திருச்செங்கோடு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த ஆண்டிபாளையத்தை சேர்ந்த மனோகரன் மகன் அணுபிரசாத், 35. இவர், திருச்செங்கோட்டில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில், 2007 நவ.,ல் 2.57 லட்சம் ரூபாய் கல்விக்கடன் பெற்றுள்ளார். இவரால், உரிய காலத்தில் தவணை தொகையை செலுத்த முடியவில்லை. 2017 மார்ச்சில், மனோகரன், அணுபிரசாத் ஆகியோரிடம் இருந்து கடனை வசூலிக்க, வங்கி மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தந்தையும், மகனும் வங்கிக்கு சென்று, கடனை ஒரே தவணையில் முடிக்கும் திட்டத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தி, கடனை செலுத்தி, கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழை வங்கியில் இருந்து பெற்றனர்.

ஆனால், வங்கியால் கடனை வசூல் செய்ய தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வங்கி திரும்ப பெறவில்லை. இதனால், 2019 செப்.,ல் அணுபிரசாத்தும், மனோகரனும் வங்கிக்கு, 5,16,885 ரூபாய் செலுத்த வேண்டும் என, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், 2024ல், தனியார், அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், அரசு வங்கியில் வாங்கிய கடனுக்கு, 7 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்' என்றும் சிலர் மிரட்டியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த தந்தையும், மகனும், வங்கி மற்றும் அசட்ஸ் ரீ கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் மீது, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 2024 ஆக.,ல் வழக்கு தாக்கல் செய்தனர். நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தும், வங்கியும், அசட்ஸ் ரீ கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

வழக்கு தாக்கல் செய்தவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று தீர்ப்பளித்தது. அதில், வங்கியின் சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சிரமங்களுக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாயை, 4 வாரத்திற்குள் வங்கி வழங்க வேண்டும். கடன் நிலுவை இல்லை என, சான்று வழங்கிவிட்டு, கடனை வசூலிக்க, அசட்ஸ் ரீ கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு அதிகாரம் அளித்தது தவறு. வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு, 4 வாரங்களுக்குள் வங்கி கடிதம் வழங்க வேண்டும்.

தவறினால், கூடுதல் இழப்பீடாக, ஒவ்வொரு நாளும், 5,000 ரூபாய் வீதம் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு வங்கி செலுத்த வேண்டும். இந்த கல்விக்கடன் கணக்கு தொடர்பான வசூல் நடவடிக்கைகள் அனைத்தையும், வழக்கு தாக்கல் செய்துள்ளவர்கள் மீது, அசட்ஸ் ரீ கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us