UPDATED : ஜன 09, 2025 12:00 AM
ADDED : ஜன 09, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
 தேனி: 
தமிழக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா சென்னையில் தமிழ்நாடு இசை, கவின்கலை பல்கலையில் நடந்தது.
தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் சாமி நாதன் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் வரவேற்றார். தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்த எழுத்தாளர் சுப்பிரமணிக்கு வழங்கப்பட்டது. இவர் ஆன்மிகம், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளார். இருபது நுால்கள் எழுதி உள்ளார்.

