sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆந்திராவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?

/

ஆந்திராவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?

ஆந்திராவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?

ஆந்திராவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?


UPDATED : ஜன 23, 2026 11:08 AM

ADDED : ஜன 23, 2026 11:10 AM

Google News

UPDATED : ஜன 23, 2026 11:08 AM ADDED : ஜன 23, 2026 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி:
ஆந்திராவில், 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

'பேஸ்புக், எக்ஸ், வாட்ஸாப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்களை, இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த, பசிபிக் கடல் தீவு நாடான ஆஸ்திரேலியா தடை விதித்தது.

புதிதாக யாரும் கணக்கு துவங்க முடியாது என்றும், பயன்பாட்டில் உள்ள கணக்குகள் நீக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. தடையை மீறும் நிறுவனங்களுக்கு, அங்கு 3 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றமும், இது போன்ற தடைகளை இந்தியாவில் அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு, கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஆந்திராவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, அம்மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “சிறுவர் சிறுமியர் சமூக ஊடகங்களில் இருக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் தாங்கள் காணும் உள்ளடக்கத்தை முழுமையாக புரிந்து கொள்வதில்லை. இதைக் கட்டுப்படுத்த, ஒரு வலுவான சட்ட கட்டமைப்பு தேவைப்படுகிறது,” என்றார்.






      Dinamalar
      Follow us