தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய ஏ.ஐ., வசதி அறிமுகத்தால் அதல பாதாளத்தில் ஐ.டி., பங்குகள்

புதிய ஏ.ஐ., வசதி அறிமுகத்தால் அதல பாதாளத்தில் ஐ.டி., பங்குகள்

புதிய ஏ.ஐ., வசதி அறிமுகத்தால் அதல பாதாளத்தில் ஐ.டி., பங்குகள்


UPDATED : பிப் 05, 2026 09:14 PM

ADDED : பிப் 05, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2026 09:14 PM ADDED : பிப் 05, 2026 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பணியிடத்தில் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் முழுமையான தானியக்க வசதிகள் கொண்ட புதிய ஏ.ஐ., வசதிகளை 'ஆந்த்ரோபிக்' நிறுவனம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்திய ஐ.டி., நிறுவனங்களின் சந்தை மதிப்பு நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது.

நேற்றைய வர்த்தக முடிவில் நிப்டி ஐ.டி., குறியீடு 5.87 சதவீதம் சரிவில் முடிந்தது. இன்போசிஸ் பங்கு விலை 7.37 சதவீதம் சரிந்து 1,534 ரூபாய்க்கு வர்த்தகமானது.

டி.சி.எஸ்., கோபோர்ஜ், எல்.டி.ஐ., மைண்ட்ரீ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே 6.99 சதவீதம், 6.02 சதவீதம் மற்றும் 5.84 சதவீதம் சரிந்து வர்த்தகத்தை முடித்தன.

'ஆந்த்ரோபிக்' நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய ஏ.ஐ., அமைப்பு, முழு வணிக செயல்முறைகளையும் தானாக கையாளும் திறன் கொண்டதாக இருப்பதால், இந்திய சந்தைகள் மட்டுமல்லாமல், உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரிய மென்பொருள் சேவைகள் மற்றும் அவுட்சோர்சிங் தேவைகள் குறையக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, உலகளாவிய ஐ.டி., மற்றும் மென்பொருள் பங்கு நிறுவனங்களையும் சேர்த்து சுமார் 25.78 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை அழுத்தத்துக்கு உள்ளானது.

ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் நேரடியாக ஆபத்தை சந்திக்கவுள்ள நிறுவனங்களின் பங்குகளில் இருந்து முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறியதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us