தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ ஜாக்டோ - ஜியோ போராட்டம் வரும் 14ம் தேதி நடத்த திட்டம்

ஜாக்டோ - ஜியோ போராட்டம் வரும் 14ம் தேதி நடத்த திட்டம்

ஜாக்டோ - ஜியோ போராட்டம் வரும் 14ம் தேதி நடத்த திட்டம்


UPDATED : பிப் 08, 2025 12:00 AM

ADDED : பிப் 08, 2025 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2025 12:00 AM ADDED : பிப் 08, 2025 10:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 14ம் தேதி தாலுக்கா அளவில் போராட்டம் நடத்த, ஜாக்டோ - ஜியோ முடிவு செய்துள்ளது.

இது குறித்த ஆலோசனை கூட்டம், கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.

ஜாக்டோ - ஜியோ மாவட்ட பொருளாளர் அருளானந்தம் கூறியதாவது:


பிரதான கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட, 12 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள தாலுகாக்களில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்க உறுப்பினர்களும், திரளக பங்கேற்கின்றனர். 10ம் தேதி அனைத்து அரசு ஊழியர்களையும், தாலுகா அலுவலகங்களில் சந்தித்து, போராட்டத்துக்கு தயார் படுத்தும் கூட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் வாயிலாக, எங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதில், ஜாக்டோ - ஜியோ உறுதியாக உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார், மாவட்டச் செயலர் வேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us