தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை வாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி நடக்கிறது

வேலை வாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி நடக்கிறது

வேலை வாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி நடக்கிறது


UPDATED : பிப் 18, 2026 03:06 PM

ADDED : பிப் 18, 2026 03:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2026 03:06 PM ADDED : பிப் 18, 2026 03:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 20 ம் தேதி நடைபெற உள்ளது.

கலெக்டர் அலுவலக வளாக நான்காவது தளத்திலுள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில், காலை, 10:00 முதல் மதியம், 02:00 மணி வரை முகாம் நடைபெறும். இம்முகாமில், மாவட்டத்தை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனத்தினர் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படும் வேலை தேடுவோருக்கு, முகாமிலேயே பணி நியமன கடிதம் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க வருவோர், தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை மற்றும் பயோடேட்டா விவரங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

வேலை அளிக்கும் நிறுனத்தினரும், வேலை தேடுவோரும், https://www.tnprivatejobs.tn.gov.in என்கிற தளத்தில் வருகையை முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us