எம்.ஏ., தமிழ் படித்தோருக்கு தமிழ் வளர்ச்சி துறையில் பணி
எம்.ஏ., தமிழ் படித்தோருக்கு தமிழ் வளர்ச்சி துறையில் பணி
UPDATED : ஆக 12, 2024 12:00 AM
ADDED : ஆக 12, 2024 09:39 AM

பொள்ளாச்சி:
எம்.ஏ., தமிழ் படித்தோருக்கு தமிழ் வளர்ச்சி துறை பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
எம்.ஏ., தமிழ் முடித்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, தமிழ் வளர்ச்சித்துறையில் உதவி இயக்குனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுவரை, இதுபோன்ற நடைமுறை இல்லை. தற்போது புதிதாக நடைமுறைக்கு வர வேண்டும் என்றும், தமிழ் வளர்ச்சித்துறையில், முதலில் தமிழில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
உதவி இயக்குனராக வேண்டும் என்றால், முதலில் தட்டச்சராக பொறுப்பேற்று, அதன்பின், கண்காணிப்பாளராகவும் பணியாற்ற வேண்டும். இதையடுத்து, உதவி இயக்குனராக வேண்டும். இனி, 50 சதவீதம் எம்.ஏ., தமிழ் படித்தவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
இவ்வாறு கூறினார்.