UPDATED : ஏப் 07, 2025 12:00 AM
ADDED : ஏப் 07, 2025 09:13 AM
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில், துாய்மை பணியாளர் உள்ளிட்ட 152 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள, துாய்மை பணியாளர் 73; தோட்டப் பணியாளர் 24; வாட்டர்மேன் 2; சுகாதார பணியாளர் 49; காவலர் நான்கு என, மொத்தம் 152 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது, 18 முதல் 37க்குள் இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பிளஸ் 2க்கு மேல் படிக்காதவர்களாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விருப்பம் உள்ளவர்கள், அடுத்த மாதம் 5ம் தேதிக்குள், https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, 6ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

