UPDATED : ஏப் 11, 2024 12:00 AM
ADDED : ஏப் 11, 2024 10:00 AM
மதுரை:
மதுரையில் ஜூன் 9ல் உலகத் தமிழ்ச் சங்கம், ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், இனிய நந்தவனம் சார்பில் தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு நடக்கிறது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. ஆலோசகர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார். வரவேற்புக்குழு தலைவராக ஓய்வுபெற்ற கலால் வரித்துறை அதிகாரி கஜேந்திரன், செயலாளராக கவிஞர் மூரா, பொருளாளராக வழக்கறிஞர் கிருஷ்ணவேணி தேர்வு செய்யப்பட்டனர்.
துணைத் தலைவர்களாக கவிஞர் இரா.இரவி, ஓவியக்கவிஞர் ஆ.உமாபதி, கவிஞர்கள் செ.தமிழ்ராஜ், அதிவீரபாண்டியன், அருணகிரி, கம்பம் புதியவன், ரமணிசர்மாவும், துணைச் செயலாளர்களாக பொன்.விக்ரம், பேனா தெய்வம், சாக்ரடீஸ், பாலாஜி, அய்யர், செந்தில்குமார், துணைப்பொருளாளராக கவிஞர் மலர்மகள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.