தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் மூலமாகவே வேலைவாய்ப்பிற்கு உடனடியாக பதிவு செய்யலாம்

பள்ளிகள் மூலமாகவே வேலைவாய்ப்பிற்கு உடனடியாக பதிவு செய்யலாம்

பள்ளிகள் மூலமாகவே வேலைவாய்ப்பிற்கு உடனடியாக பதிவு செய்யலாம்


UPDATED : மே 10, 2011 12:00 AM

ADDED : மே 10, 2011 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2011 12:00 AM ADDED : மே 10, 2011 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது மதிப்பெண் பட்டியலை பெறும்போது, பள்ளிகள் மூலமாகவே, "ஆன்-லைன்" முறைப்படி வேலைவாய்ப்புக்கு பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவியர் தங்களது மதிப்பெண் சான்றிதழை பெறும் நாளிலேயே, அவர்களது மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவுசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர் தங்கள் கல்வித் தகுதியை, "ஆன்-லைன்" மூலம் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவே பதிவுசெய்து கொள்ளலாம். மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற பள்ளிக்குச் செல்லும்போது, தங்களது குடும்ப அட்டையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.


அந்த குடும்ப அட்டையில், பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். 10ம் வகுப்பு கல்வித்தகுதியை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். தற்போது, புதிதாக பதிவு செய்வோருக்கு உரிய பதிவெண்கள் வழங்கப்படும். பதிவுதாரர் மாற்றுத் திறனாளியாக இருந்தால், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளிகளில் பதிவுசெய்த பின், தங்கள் முன்னுரிமையைப் பெற, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.


இதனால், கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியிடுவதை ஒட்டி ஒரே நாளில் பல்லாயிரம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் கால விரயம் முற்றிலும் தவிர்க்கப்படும். எனவே, பள்ளிகள் வாயிலாக, "ஆன்-லைன்" மூலம் பதிவுசெய்ய இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us