தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்தல் முடிவுக்குப் பின் உடனடியாக ஆசிரியர் பணி நியமனம்

தேர்தல் முடிவுக்குப் பின் உடனடியாக ஆசிரியர் பணி நியமனம்

தேர்தல் முடிவுக்குப் பின் உடனடியாக ஆசிரியர் பணி நியமனம்


UPDATED : மே 10, 2011 12:00 AM

ADDED : மே 10, 2011 11:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2011 12:00 AM ADDED : மே 10, 2011 11:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சிவகங்கை: தமிழகத்தில் 6,195 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மே 13க்கு பின், பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.


பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, கடந்த மார்ச்சில் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றுகளை சரிபார்த்தது. அதன்படி, ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்திற்கு 1,200 தொடக்கப்பள்ளிகளுக்கு 1,155, மற்ற பள்ளிகளுக்கு 3,665, கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி 175 என மொத்தம் 6,195 ஆசிரியர்களை தேர்வுசெய்ய முடிவு செய்தது. இதற்காக பட்டதாரிகளுக்கு கவுன்சிலிங் நடத்தாமலேயே பணி நியமன உத்தரவை அனுப்பும் முயற்சியில் ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கியது.


இதற்கிடையில், சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் பணி நியமனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தேர்தல் முடிவுக்கு பின், நிச்சயம் 6,195 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படும் என தேர்வு வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேர்தல் தேதி அறிவிக்காமல் இருந்திருந்தால், பணி நியமன உத்தரவு பட்டதாரிகள் வீட்டிற்கே சென்றிருக்கும். தேர்வு வாரியம் நியமன உத்தரவுகளை அனுப்ப முயற்சித்தபோது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவு வெளியான மறுநாளோ அல்லது அந்த வாரத்திற்குள்ளாகவோ கவுன்சிலிங் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us