தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு முடிவுகளுடன் விருதும், ரொக்கப் பரிசும்!

தேர்வு முடிவுகளுடன் விருதும், ரொக்கப் பரிசும்!

தேர்வு முடிவுகளுடன் விருதும், ரொக்கப் பரிசும்!


UPDATED : மே 10, 2011 12:00 AM

ADDED : மே 11, 2011 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2011 12:00 AM ADDED : மே 11, 2011 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் மற்றும் தனலட்சுமி பொறியியல் கல்லூரி, தாம்பரம் இணைந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நேற்று தினமலர் இணையதளத்தில் வெளியிட்டது. தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தினமலர் இணையதளத்தில் பதிந்தவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாவது ஆண்டாக ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.


மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெறவும், உயர்கல்வியை தேர்வு செய்யவும் தேவையான ஆலோசனைகளை சரியான தருணத்தில் அளித்துவரும் தினமலர், மாணவர்களின் ஆர்வத்தை புரிந்து பொதுத்தேர்வு முடிவுகளையும் வெளியான உடன் இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக வழங்கி வருகிறது.


தமிழக அரசு நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டதும், தினமலர் துடிப்புடன் செயல்பட்டு காலை 9.15 மணியளவில் இணையதளத்தில் வெளியிட்டது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முன்பே ஆர்வமுடன் பதிந்தவர்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக மதிப்பெண்களுடன் உடனுக்குடன் அனுப்பப்பட்டது.


தினமலர் வழியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள பதிந்தவர்களில் முதல் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு ரூ. 40 ஆயிரமும், இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்றவருக்கு ரூ. 25 ஆயிரமும், மூன்றாவது அதிக மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.15 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதுதவிர 10 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.


சாதனையாளர்கள்: 1200க்கு, 1191 மதிப்பெண்கள் குவித்த தமிழகத்தின் முதல் மதிப்பெண் மாணவி சந்தியா தினமலர் இணையதளத்தில் பதிந்திருந்தார். இவருக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. குரோம்பேட்டையைச் சேர்ந்த இவர் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக எடுத்து பிளஸ் 2 தேர்வெழுதி உள்ளார்.


மாணவி சந்தியா கூறுகையில், “நன்றாக படிக்கவேண்டும், நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படித்தேன். பெற்றோர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தனர். படி, படி என கட்டாயப் படுத்தவில்லை . மற்றவர்களோடு என்னை ஒப்பிட்டும் பேசமாட்டார்கள். பள்ளி முதல்வரும், ஆசிரியர்களும் என்னை ஊக்கப்படுத்தினர். ஆர்வத்தோடு படித்தேன்; வெற்றியும் பெற்றேன். அடுத்து என்ன படிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. தினமலரின் விருது கிடைப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார்.


முதல் பரிசு:
சந்தியா (1191), செங்கல்பட்டு


இரண்டாம் பரிசு:
சுருதி கணேஷ் (1188), சென்னை


மூன்றாம் பரிசு:
சுவாதி (1187), செங்கல்பட்டு
அஞ்சனா ராகவேந்தரா (1187), கோவை


ஊக்கப் பரிசு:
ராதிகா (1186), சென்னை
கவிதா (1186), புதுச்சேரி
சுபா (1186), மதுரை
சிந்துகவி (1186), நாமக்கல்
அஞ்சனா (1186), பொள்ளாச்சி
வித்யா சகுந்தலா (1186), திருநெல்வேலி
பத்மபிரபா (1185), பொன்னேரி
மணிகண்டன் (1185), விழுப்புரம்
வசந்த் குமார் (1185), திருச்சி
சிவசுப்ரமணியம் (1185), பொன்னேரி


அங்கம் வகித்த கல்வி நிறுவனங்கள்: தினமலர் மற்றும் தனலட்சுமி பொறியியல் கல்லூரி, தாம்பரம் இணைந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வழங்க, அல்ட்ரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, என்.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி, மணக்குல விநாயகர் கல்வி நிறுவனங்கள், சாய்ராம் பொறியியல் கல்லூரி ஆகியவை மெயின் ஸ்பான்சர்களாகவும், விக்ரம் பொறியியல் கல்லூரி, ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, இன்போ கல்வி நிறுவனம், ஸ்ரீகிருஷ்ணா மற்றும் வி.எல்.பி. கல்வி நிறுவனம், விநாயகா மிஷன் அறுபடை வீடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவை கோ-ஸ்பான்சர்களாகவும் அங்கம் வகித்துள்ளன.


தனலட்சுமி பொறியியல் கல்லூரி நிறுவனரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான வி.பி. ராமமூர்த்தி கூறுகையில், “தனலட்சுமி அறக்கட்டளையின் கீழ் 2001ம் ஆண்டில் துவங்கப்பட்ட தனலட்சுமி பொறியியல் கல்லூரி, கடந்த 10 ஆண்டுகளாக கல்விச் சேவையை சிறப்புடன் செய்து வருகிறது. இக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தால் சிறந்த தேர்ச்சி விகிதத்திற்காக 7வது ரேங்க் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிக்காக 8வது ரேங்க் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன், தரமான கல்வியை அளித்து வரும் தனலட்சுமி பொறியியல் கல்லூரி தினமலர் உடன் இணைந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வழங்கியதில் பெருமையடைகிறது" என்றார்.


ஒரு லட்சம் பேர் பதிவு: இந்தியாவின் முதல் பப்ளிகேஷன் இணையதளமான தினமலர் இணையதளத்தை சராசரியாக மாதம் 15 லட்சம் வாசகர்கள், ஒன்பது கோடி பக்கங்களை பார்க்கின்றனர். வெளிநாடுகளை பொறுத்தவரை அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், பிரிட்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தினமலர் இணையதளத்தை அதிகளவு பார்க்கின்றனர். உலகளவில் 200 நாடுகளில் வாசிகர்களை கொண்டுள்ளது தினமலர்.காம்.


இந்த ஆண்டு தினமலர் வழியாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஆன்லைனில் 60 ஆயிரம் பேர், எஸ்.எம்.எஸ்., வாயிலாக 40 ஆயிரம் பேர் என ஒரு லட்சம் மாணவ, மாணவியர் பதிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us