தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் முக்கியம்

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் முக்கியம்

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் முக்கியம்


UPDATED : மே 13, 2011 12:00 AM

ADDED : மே 13, 2011 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2011 12:00 AM ADDED : மே 13, 2011 12:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை: தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறலாம் என விஜய் கார்த்திகேயன் கூறினார்.


மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் விஜய் கார்த்திகேயன். யு.பி. எஸ்.சி. தேர்வில், இந்திய அளவில் 22வது ராங்க் பெற்று, ஐ.ஏ.எஸ். ஆக வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை கண்ணன், சென்னையில் முதன்மை வன பாதுகாவலராக உள்ளார். மதுரை மகாத்மா மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்த விஜய் கார்த்திகேயன், எம்.பி.பி.எஸ். படித்தார். அவர் கூறியதாவது, "ஐ.ஏ.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளுக்கு, தற்போது, மதுரை உட்பட அனைத்து நகரங்களிலும் புத்தகங்கள் கிடைக்கின்றன.


இதற்கான பாடத்திட்டம் குறித்து அறிந்து, வினாக்களை தயாரித்து நானே பிராக்டிக்ஸ் பெற்றேன். பின் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பயிற்சி பெற்றேன். மெயின் தேர்வுக்காக நான் பாடவாரியாக தலைப்புகளை பிரித்து படித்தேன். நேர்முக தேர்வுக்கு செய்தித் தாளை நன்கு படித்து தயாரானேன். கடவுள் நம்பிக்கையுடன், விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால் வெற்றி பெறலாம்" என்று அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us