UPDATED : மே 14, 2011 12:00 AM
ADDED : மே 14, 2011 11:56 AM
முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு இலவச தொழில்முறை கல்வி பயிற்சி சென்னையில் அளிக்கப்படுகிறது.
முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், குழந்தைகளுக்கு இலவச தொழில்முறை கல்வி பயிற்சியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் படிப்பு, அவுஸ் கீப்பிங் கிச்சன் டிரெயினிங் புட் புரசீடிங் போன்ற பயிற்சிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 6 வாரம் சென்னை தரமணியில் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி முடித்த 21 முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு சென்னையில் உள்ள சவேரா ஓட்டலில் மாத சம்பளம் ரூ.6 ஆயிரம் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்த பயிற்சி வகுப்புகள் வருகிற 30-ந் தேதி முதல் சென்னை தரமணியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட்டில் 6 வார பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சியில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சென்னையில் தங்கி பயிற்சி பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் தங்களது பெயரை வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
