UPDATED : மே 14, 2011 12:00 AM
ADDED : மே 14, 2011 11:58 AM
சென்னையில் கார் பார்க்கிங் சிஸ்டமில், வாகன நிறுத்து கட்டணம் வசூலிப்பவர் பணியிடத்துக்கு முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வாகன நிறுத்தும் கட்டணம் வசூலிப்பவர் பணிக்கு மாத ஊதியம் ரூ.4,560 வழங்கப்படும். தங்குமிடம் இலவசம். வருடத்துக்கு 2 இலவச சீருடை வழங்கப்படும். பி.எப்., பணித்தொகை, போனஸ் வழங்கப்படும். குடும்ப நல ஓய்வூதியம், இழப்பு காப்பீடு தொகையும் வழங்கப்படும்.
இதில் சேர கல்வி தகுதிச்சான்று, தந்தையின் ராணுவ பணிச்சான்று, 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 20-ந் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ச.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
