தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டுப்புழு வளர்ப்பு படிப்பு

பட்டுப்புழு வளர்ப்பு படிப்பு

பட்டுப்புழு வளர்ப்பு படிப்பு


UPDATED : மே 17, 2011 12:00 AM

ADDED : மே 17, 2011 02:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2011 12:00 AM ADDED : மே 17, 2011 02:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பட்டுப்புழுவின் வாழ்நாள் ஒரு மாதம். நல்ல சுத்தமான சுற்றுச் சூழல், தரமான மல்பரி இலை,பூச்சி மற்றும் நோய்களிடமிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணிகள் புழுவின் வளர்ப்பில் முக்கியமானவை. பட்டுப்புழு வளர்ப்பு குறித்து படிக்கும் படிப்பை "செரிகல்சர்&' என்று அழைப்பார்கள்.


இந்த படிப்பை அளிக்கும் கல்வி நிறுவனங்கள்:
* மத்திய பட்டுப்புழு வளர்ப்பு ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம், மைசூரு முதுநிலை பட்டப்படிப்பில் பட்டுப்புழுவளர்ப்பு கற்றுத்தரப்படுகிறது. லைப் சயின்சில் இளநிலை படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு silk.csrtimys.res.in


* தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை இங்கு முதுநிலை பட்டப்படிப்பில் இத்துறை சார்ந்த படிப்பு வழங்கப்படுகிறது. இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.tnau.ac.in


* ஷெர்இகாஷ்மீர் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காஷ்மீர் இப்பல்கலையில் பட்டுப்புழு வளர்ப்பில் முதுநிலை படிப்பு உள்ளது. இந்த படிப்பில் சேருவதற்கு இங்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விவரங்களுக்கு www.skuastkashmnir.ac.in


* மைசூரு பல்கலைக்கழகம், மைசூரு செரிகல்சர், செரிபயோடெக்னாலஜியில் முதுநிலை படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன. இளநிலை பட்டப்படிப்பில் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.விவரங்களுக்கு www.unimysore.ac.in


* ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் பல்கலைக்கழகம், அனந்தபூர் இங்கு எம்.எஸ்சி., , எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பிரிவுகளின் கீழ் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்றுவிக்கப்படுகின்றன. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.skuniversity.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us