UPDATED : மே 19, 2011 12:00 AM
ADDED : மே 19, 2011 10:35 AM
பிளஸ் 2 தேர்ச்சி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் ஆன்-லைனில் வேலை வாய்ப்பக பதிவு செய்யப்படுவதால், அனைவருக்கும் மே 25 சீனியாரிட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மே 25ல் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படுகின்றன. மதிப்பெண் சான்றுகளை வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய, அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்யப்படவுள்ளது.
பதிவு செய்யும் மாணவர்கள் ரேஷன் கார்டு, 10ம் வகுப்பு பதிவு செய்திருந்தால், வேலை வாய்ப்பகத்தில் வழங்கப்பட்ட அட்டை, முகவரி, மொபைல் எண் வழங்கினால் போதும். மே 25 முதல் ஜூன் 8ம் தேதி வரை பதிவு செய்யலாம். இந்த 15 நாட்களில் பதிவு செய்யும் அனைவருக்கும் மே 25ம் தேதி சீனியாரிட்டி வழங்கப்படும்.
தனித் தேர்வர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். ஜூன் 8ம் தேதிக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு, எந்த தேதியில் பதிவு செய்கின்றனரோ அந்த தேதியில் இருந்து சீனியாரிட்டி வழங்கப்படும் என, வேலை வாய்ப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
