UPDATED : மே 21, 2011 12:00 AM
ADDED : மே 21, 2011 11:36 AM
அ நிறம் | அளவு
பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வு மூலமாகவும் 10 லட்சம் மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். இதன் முடிவுகளை, மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு, மே 25ம் தேதி தேர்வு முடிவு வெளியானதால், இந்த ஆண்டும் இதே தேதிக்குள் முடிவு வெளியாகலாம் என, கூறப்பட்டது. ஆனால், 25ம் தேதிக்குப் பிறகே, தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பிருப்பதாக, துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
டேட்டா சென்டரில், மாணவர்களின் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணி முடிவடைந்தாலும், அவற்றை சரிபார்க்கும் பணி, நாளை முதல் நடைபெறும். இவை முடிய நான்கு முதல் ஐந்து நாட்கள் தேவைப்படும் என்பதால், அடுத்த வார இறுதியில் தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
