UPDATED : மே 23, 2011 12:00 AM
ADDED : மே 23, 2011 11:40 AM
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளன.
* பீகார் மத்திய பல்கலைக்கழகம், பாட்னா, www.cub.ac.in
* ஜார்கண்ட் மத்திய பல்கலைக்கழகம், ராஞ்சி, www.cuj.ac.in
* கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம், குல்பர்கா, www.cuk.ac.in
* காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகம், ஸ்ரீநகர், www.cukashmir.ac.in
* கேரள மத்திய பல்கலைக்கழகம், காசர்கோடு, www.cukerala.ac.in
* ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், அஜ்மீர், www.curaj.ac.in
* தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர், www.tiruvarur.tn.nic.in
ஆகிய ஏழு மத்திய பல்கலைக்கழகங்கள் கூட்டாக இணைந்து பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கையை அறிவித்துள்ளன. இதற்காக சி.யு.சி.இ.டி., என்ற பொது நுழைவுத்தேர்வை அவை நடத்துகின்றன. இதற்கு வரும் ஜூன் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை அப்பல்கலைக்கழகங்களின் இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
