தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமுதாயத்திற்கு அவசியமான குறிக்கோளுடன் வெற்றி விகாஸ்

சமுதாயத்திற்கு அவசியமான குறிக்கோளுடன் வெற்றி விகாஸ்

சமுதாயத்திற்கு அவசியமான குறிக்கோளுடன் வெற்றி விகாஸ்


UPDATED : மே 23, 2011 12:00 AM

ADDED : மே 23, 2011 11:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2011 12:00 AM ADDED : மே 23, 2011 11:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சாதாரண மாணவர்களை சிறப்பான மதிப்பெண் பெற வைப்பதே உயரிய சாதனை. இதையே குறிக்கோளாக கொண்டு, மதிப்பெண் குறைந்த சாதாரண மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அதிக மதிப்பெண் பெறச்செய்கிறது நாமக்கல் மாவட்ட வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்கள்.


இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் மூன்று பாடங்களில் ஒரு மாணவரும், இரண்டு பாடங்களில் 11 பேரும், ஒரு பாடத்தில் 76 பேரும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 1,200க்கு 1,170மதிப்பெண்ணுக்குமேல் 11 பேரும், 1,150க்குமேல் 65 பேரும், 1,100க்குமேல் 193 பேரும், ஆயிரத்திற்குமேல் 642 பேரும் எடுத்துள்ளனர். பள்ளியில் 1,178 மதிப்பெண் எடுத்து திருமலை வாசன் மற்றும் சந்தியா ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர். பள்ளியின் சராசரி மதிப்பெண் 1,031.


இதுகுறித்து அக்கல்வி நிறுவனங்களின் தலைவர் கணேசன் கூறியதாவது:


பொதுவாக முன்னணி பள்ளிகள் பத்தாம் வகுப்பில் 400க்கு குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்குதில்லை. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றி விகாஸ் மதிப்பெண் பாகுபாடின்றி அட்மிஷன் வழங்கி வருகிறது. சாதாரண, குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படுகிறது. எந்த பாடங்களில் குறைவான மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேட்ப சிறப்பு பயிற்சி அளித்து அதிக மதிப்பெண் பெறச் செய்கிறது.


வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களில் மொத்தம் ஆறாயிரம் மாணவ, மாணவிகள் உள்ளனர். இந்தாண்டு அனைத்து பிரிவிலும் சேர்த்து 37 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கை பெறும் வகையில் அதிக கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். பொறியியல் கட்ஆப் பொறுத்தவரை 105 மாணவர்கள் சிறப்பான மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் 285 மதிப்பெண் மட்டுமே எடுத்த மாணவர் தமிழரசன் பிளஸ் 2 தேர்வில் 1,128 மதிப்பெண் பெற்றுள்ளார். இதேபோல், 100க்கும் மேற்பட்டோர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.


மாணவர்களின் மன வலிமையை அதிகரிக்க செய்யும் வகையில் வகுப்புக்கு முன்பு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., ஏ.ஐ.இ.இ.இ., ஜே.இ.இ ஐ.ஐ.டி., போன்ற தேசிய அளவிலான தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி, ஆடியோ விஷûவல் லேங்குவேஜ் லேப் மூலம் மொழிப் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு முதல் ஐ.சி.எஸ்.இ., சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சர்வதேச அளவிலான கல்வி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கணேசன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us