தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவம் பயில்வோம்

கால்நடை மருத்துவம் பயில்வோம்

கால்நடை மருத்துவம் பயில்வோம்


UPDATED : மே 24, 2011 12:00 AM

ADDED : மே 24, 2011 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2011 12:00 AM ADDED : மே 24, 2011 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கால்நடை மருத்துவம் என்பது இப்போது தோன்றியது அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அசோகரின் ஆட்சி காலத்தில், மருத்துவமனைகளுக்கு நிகராக கால்நடை மருத்துவமனைகளும் துவக்கப்பட்டுள்ளன. 1882ம் ஆண்டில் லாகூரில் முதல் கால்நடை கல்லூரி துவக்கப்பட்டுள்ளது.


உலக அளவில் இந்தியாவில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது. விவசாய நாடான இந்தியாவில், கால்நடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இயற்கைத்தானே.


கால்நடை மருத்துவம்
கால்நடை மருத்துவம் என்பது, நோயுற்ற விலங்கின், நோய்த் தன்மையை கண்டறிந்து, சிகிச்சை அளித்து, அதனை பராமரிப்பதாகும். இதில் சிறிய குருவி முதல் யானை வரை அனைத்துமே அடங்கும். கால்நடை மருத்துவர்கள், சாதாரண சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த சிக்சைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.


பட்டப்படிப்பு
பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடம் எடுத்துப் படித்தவர்கள் வெட்னரி சயின்ஸ் இளநிலை பட்டப்படிப்பு படிக்க தகுதியானவர்களாவர். பி.வி.எஸ்.சி. மற்றும் அனிமல் ஹஸ்பன்டரி பாடப்பிரிவுகளில் சேர்ந்து கால்நடை மருத்துவராகலாம்.  பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழகம், இந்த படிப்புகளுக்கான கால அளவு நான்கரை ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும். இந்த படிப்பில் வகுப்பறை பாடங்களும், நேரடி பயிற்சிகளும் இடம்பெறும். கால்நடை மருத்துவத்திலும் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. கடைசி 6 மாதங்கள் நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெறும்


சேர்க்கை முறை
பொதுவாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள், அகில இந்திய அளவில் நடைபெறும் ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வினை அடிப்படையாகக் கொண்டே மாணவ சேர்க்கையை நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மாணவ சேர்க்கை நடைபெறும். கால்நடை மருத்துவத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர ஐ.சி.ஏ.ஆர் எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வின் மூலம் சேர்க்கை நடைபெறும்.


நுழைவுத் தேர்வுகள்
அனைத்திந்திய பொது நுழைவுத் தேர்வு
ஜே.என்.யு. ஒன்றிணைந்த பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு
தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக நுழைவுத் தேர்வு
கேரளா பொறியியல், வேளாண்துறை மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு
அனைத்திந்திய முன் கால்நடைத் தேர்வு
பொறியியல், வேளாண்துறை மற்றும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு
கேரளா வேளாண்துறை பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு
கால்நடை அறிவியில் மற்றும் விலங்கு காப்பகக் கல்லூரி நுழைவுத் தேர்வு


கல்வி முறை
கால்நடை மருத்துவக் கல்வியில் மாணவர்களின் வருகைப் பதிவேடு மிகவும் முக்கியம். பாடப்பிரிவுகளும், பயிற்சி வகுப்புகளும் கொண்டதாக இருக்கும். 


வேலை வாய்ப்பு
பண்ணைகள் மற்றும் வளர்ப்பிடங்களில் கால்நடை மருத்துவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. பண்ணைகள் அமைக்க வங்கிக் கடன் வழங்கும் முன், கால்நடை மருத்துவர்களின் சான்றிதழ் அவசியமாகிறது. வேளாண் துறை, அரசு விலங்கினக் காப்பகங்கள், பண்ணைகள், கால்நடை மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சைக் கூடங்கள் போன்றவற்றில் கால்நடை மருத்துவர்களின் தேவை அதிகமாக உள்ளது.


மேலும், கால்நடை மருத்துவத் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றலாம். கால்நடை மருத்துவ கல்வி மையங்களில் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது. மருந்து கண்டுபிடிப்பு நிறுவனங்களில், விலங்குகளுக்கான மருந்துகளை கண்டறியும் பணியிலும் ஈடுபடலாம்.


சவாலான கால்நடை மருத்துவம்
புத்திக் கூர்மையும், பொருமையும் இந்த துறையில் பணியாற்றும் நபருக்கு அவசியமானதாகும். ஏனெனில் உங்களிடம் வரும் நோயாளி பேச மாட்டார். அவருக்கு என்ன பிரச்சினை என்பதை நீங்கள்தான் கண்டறிய வேண்டும். இது ஒரு சவாலான வேலை தான். அடுத்து உங்களிடம் வரப்போகும் நோயாளி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். வீட்டில் செல்லமாக வளர்த்த கிளியாகவும் இருக்கலாம், கோயில் யானையாகவும் இருக்கலாம். எதற்கும் தயாராக இருக்க வேண்டியது சவாலான விஷயம்தானே?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us