தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சகஸ்ட்ர சீமா பால் அமைப்பில் டிரைவர் பிரிவு கான்ஸ்டபிள்கள்

சகஸ்ட்ர சீமா பால் அமைப்பில் டிரைவர் பிரிவு கான்ஸ்டபிள்கள்

சகஸ்ட்ர சீமா பால் அமைப்பில் டிரைவர் பிரிவு கான்ஸ்டபிள்கள்


UPDATED : மே 25, 2011 12:00 AM

ADDED : மே 25, 2011 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2011 12:00 AM ADDED : மே 25, 2011 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) அமைப்பில் 649 டிரைவிங் பிரிவு கான்ஸ்டபிள்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இட ஒதுக்கீடும் உள்ளது. முதலில் தற்காலிக அடிப்படையில் எடுக்கப்படும் இந்தப் பதவிகள் நிரந்தரமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு
எஸ்.எஸ்.பி.,யின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க 01.08.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், அரசு ஊழியர்களுக்கு 7 ஆண்டுகளும்சலுகைகள் உள்ளன. முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.


கல்வித் தகுதி
சகஸ்ட்ர சீமா பாலின் டிரைவிங் பிரிவு கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க 30.06.2011 அன்று குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் ஹெவிவெகிக்கிள் ஓட்டுவதற்கான லைசென்சும் பெற்றிருக்க வேண்டும்.


உடல் தகுதி
எஸ்.எஸ்.பி.,யின் மேற்குறிப்பிடப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படுகிறது. உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீ.,யும், இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும்.மார்பளவு குறைந்த பட்சம் 80 செ.மீ.,யும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., யும் பெற்றிருக்க வேண்டும். நல்ல கண்பார்வையும் இருக்க வேண்டும்.


தேர்ச்சி முறை
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, உடல் பரிசோதனை போன்ற நிலைகளை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும். உடல் தகுதித் தேர்வில் 6.5 நிமிடங்களில் ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடப்பதும், குறைந்த பட்சம் 11 அடி தூரத்தை நீளம் தாண்டுவதும், குறைந்த பட்சம் 3.6 அடி உயரம் தாண்டுவது போன்ற சோதனைகள் நடத்தப்படும்.


எழுத்துத் தேர்வில் பொது அறிவு, ஜெனரல் அவேர்னஸ், அடிப்படை கணிதம், அனலிடிகல் ஆப்டிடியூட் போன்ற பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த எழுத்துத் தேர்விற்கான மையத்தை அழைப்புக் கடிதத்தின் மூலமாக அறியலாம். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஓட்டுனர் சிறப்புத் தேர்வு நடத்தப்படும். இதற்குப் பின்னர் மருத்துவப் பரிசோதனைக்கான அழைப்பு வரும்.


விண்ணப்பக் கட்டணம்
சகஸ்ட்ர சீமா பால் அமைப்பின் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/ஐ Accounts Officer (SSB) O/O IG FTR HQ Patna என்ற பெயரில் ஸ்டேட் வங்கி  பாட்னா கிளை 0152யில் மாற்றத்தக்க டி.டி.,யாகவோ அல்லது போஸ்டல் ஆர்டராகவோ எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது.


விண்ணப்பிப்பது எப்படி
விண்ணப்பக் கட்டணத்தை டி.டி.,யாக எடுத்த பின்னர் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள், டி.டி., மற்றும் இதர சான்றுகளுடன் பின்வரும் முகவரிக்கு 30.06.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த முழுமையான விபரங்களை அறிய கட்டாயம் இணைய தளத்தைப் பார்க்கவும்.


முகவரி
The Inspector General,
FTR HQ (SSB), Patna,
Rukanpura House, Baily Road,
Patna, Bihar 800014.


விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2011


இணைய தள முகவரி: http://ssb.nic.in/shared/linkimages/2622.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us