தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/27ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

27ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

27ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்


UPDATED : மே 25, 2011 12:00 AM

ADDED : மே 25, 2011 04:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2011 12:00 AM ADDED : மே 25, 2011 04:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிகலேஷன் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. தமிழகம் மற்றம் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்புத் தேர்வினை எழுதியுள்ளனர்.


இதையடுத்த ஏப்ரல் மாதம் துவங்கிய விடைத்தாள் திருத்தும் பணி, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே 27ம் தேதி வெளியிடுவது என்று அரசு திட்டமிட்டுள்ளது.


இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகளை 27ம் தேதி வெளியிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தேர்வு முடிவுகள் 27ம் தேதி காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகிறது.


மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், இணைய தளங்கள், குறுந்தகவல்கள் மூலமும் தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


வழக்கமாக பொதுத்தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியிடப்படும். இப்போது எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us