தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒளிவு மறைவின்றி இன்ஜினியரிங் கவுன்சிலிங்

ஒளிவு மறைவின்றி இன்ஜினியரிங் கவுன்சிலிங்

ஒளிவு மறைவின்றி இன்ஜினியரிங் கவுன்சிலிங்


UPDATED : மே 30, 2011 12:00 AM

ADDED : மே 30, 2011 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2011 12:00 AM ADDED : மே 30, 2011 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்ட, தினமலர் நாளிதழ் சார்பில், உங்களால் முடியும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடந்தது. எஸ்.வி.எஸ். இன்ஜினியரிங் கல்லூரியுடன் இணைந்து, வடகோவை கிக்கானி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.


அண்ணா பல்கலை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் பேசியதாவது: கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கவுள்ள படிப்பு மற்றும் கல்லூரிகள் குறித்த தெளிவான விவரங்களுடன் வர வேண்டும். ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே வந்து விடுவது நல்லது. இன்ஜினியரிங் கவுன்சிலிங் 100 சதவீதம் ஒளிவு மறைவின்றி நடைபெறும். விரும்பிய இடம் பெற்றுத் தருவதாக கூறி திரிபவர்களை நம்ப வேண்டாம். கட்-ஆப் மதிப்பெண்ணின் அடிப்படையில் மட்டுமே படிப்பு ஒதுக்கப்படும்.


பொதுப் பிரிவினர் 5,000 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 1,000 ரூபாயும் டிபாசிட் செலுத்த வேண்டும். மொத்த கட்டணத்தில் இருந்து இத்தொகை அட்ஜஸ்ட் செய்து கொள்ளப்படும். டிபாசிட் தொகையை வரைவோலை எடுக்க, கவுன்சிலிங் நடைபெறும் வளாகத்திலேயே வங்கி வசதி உள்ளது.


கல்லூரி வாரியாக காலியாக உள்ள படிப்புகள் குறித்த விவரம், கவுன்சிலிங் நடைபெறும் அறைக்கு வெளியே உள்ள பெரிய திரையில் ஒவ்வொரு நிமிடமும் அறிவிக்கப்படும். கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளே செல்வதற்கு முன், குறைந்தது நான்கு கல்லூரிகளை சாய்ஸ் அடிப்படையில் தயாராக வைத்திருக்க வேண்டும். இரண்டு, மூன்று நிமிடங்களுக்குள் கல்லூரி, படிப்பை தேர்வு செய்து விட வேண்டும். ஒருமுறை தேர்வு செய்து விட்டால் மாற்ற முடியாது.


ஒரே பெயரில் பல கல்லூரிகள் உள்ளதால், கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை பின்பற்றுவதே நல்லது. நண்பர்கள், பக்கத்து வீட்டார், விளம்பரங்களை நம்பாமல் கல்லூரிகளுக்கே நேரில் சென்று உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர், வேலை வாய்ப்பு விவரங்களை விசாரிக்க வேண்டும். அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களை விசாரித்தாலே கல்லூரியின் தரம் விளங்கி விடும்.


அனைத்து படிப்பும் சிறந்த படிப்புதான். ஒரு குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்வதற்கு முன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அப்படிப்புக்கான வேலை வாய்ப்புகள் குறித்து விசாரித்து தெரிந்து கொள்வது நல்லது. பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்த பின், அவர்களிடம் நண்பர்களைப் போல் பழகுவது நல்லது. அதிகமாக கண்டித்தால், கல்லூரியில் நடைபெறும் பல விஷயங்கள் பெற்றோருக்கு தெரியாமலே போய் விடும். இவ்வாறு, ரைமண்ட் உத்தரியராஜ் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us