தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எந்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு என்ன படிப்பு கிடைக்கும்?

எந்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு என்ன படிப்பு கிடைக்கும்?

எந்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு என்ன படிப்பு கிடைக்கும்?


UPDATED : மே 30, 2011 12:00 AM

ADDED : மே 30, 2011 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2011 12:00 AM ADDED : மே 30, 2011 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் நாளிதழ் சார்பில் நேற்று நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியின் இறுதியில், பெற்றோரும் மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி மற்றும் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் அளித்த பதில்கள்.


கேள்வி : 182 கட்-ஆப்க்கு (பி.சி., வகுப்பு) என்ன படிப்புக்கு இடம் கிடைக்கும்?
கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிப்புகளுக்கு கோவை பார்க், இந்துஸ்தான், கற்பகம் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.


கேள்வி : 195 கட்-ஆப் (ஓ.சி) மதிப்பெண்ணுக்கு பயோ டெக்னாலஜி இடம் கிடைக்குமா?
கோவையில் குமரகுரு, சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கல்லூரிகளிலும், சென்னையில் ராஜலஷ்மி, செயின்ட் ஜோசப் கல்லூரிகளிலும் இப்படிப்புக்கு இடம் கிடைக்கும்.


கேள்வி : 166 கட்-ஆப் (எஸ்.சி.,) எலக்ட்ரானிக்ஸ் அண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்க்கு (டிரிபிள் இ) குமரகுரு, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரிகளில் சீட் கிடைக்குமா?
கோவை முன்னணி சுயநிதி கல்லூரிகளில் உறுதியாக கிடைக்கும்.


கேள்வி :  198.75 கட்-ஆப் (ஓ.சி)க்கு பி.எஸ்.ஜி., அரசு தொழில் நுட்ப கல்லூரியில் டிரிபிள் இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி., சீட் கிடைக்குமா?
பி.எஸ்.ஜி.,யில் கிடைக்கும்.


கேள்வி :  198.25 கட்-ஆப் (பி.சி) மதிப்பெண்ணுக்கு கோவை கல்லூரிகளில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்  சீட் கிடைக்குமா?
கண்டிப்பாக கிடைக்கும்.


கேள்வி :  ஸ்கவுட் இயக்கத்தில் சிறப்பு சான்றிதழ் உள்ள மாணவருக்கு கவுன்சிலிங்கில்  20 சதவீத ஒதுக்கீடு உள்ளதாக கூறப்படுவது உண்மையா?
அப்படி தகவல் எதுவும் இல்லை.


கேள்வி :  197.25 (பி.சி)க்கு சி.ஐ.டி., கல்லூரியில் எந்த படிப்பு கிடைக்கும்?
ஐ.டி., கிடைக்க வாய்ப்பு குறைவு. குமரகுரு கல்லூரியில் கிடைக்கலாம்.


கேள்வி :  183 (எஸ்.சி)க்கு பி.எஸ்.ஜி.,யில் கிடைக்குமா?
பி.எஸ்.ஜி.யில் ஏதாவது ஒரு படிப்பு கிடைக்கும்.


கேள்வி :  195 (எம்.பி.சி)க்கு எந்த கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சீட் கிடைக்கும்?
குமரகுரு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பும், அரசு தொழில் நுட்ப கல்லூரியில் ஐ.டி.யும் கிடைக்கும்.


கேள்வி : 190.25 (ஓ.சி)க்கு கோவையில் எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும்?
கிருஷ்ணா, ராமகிருஷ்ணா கல்லூரிகளில் கிடைக்கும்.


கேள்வி : 191.07 (ஓ.சி)க்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு கிடைக்குமா?
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங்  கல்லூரியில் கிடைக்கும்.


கேள்வி : 190.5 (எப்.சி)க்கு கோவையில் எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும்?
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங்  கல்லூரியில் கிடைக்கும். சிறந்த கேம்பஸ் தேர்வு உள்ளது.


கேள்வி : 184 எஸ்.சி (ஏ)க்கு சென்னையில் சீட் கிடைக்குமா?
சென்னை அண்ணா பல்கலையில் கூட இடம் கிடைக்கும்.


கேள்வி : கேட் (காமன் ஆப்டிடியூட் டெஸ்ட்) தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?
ஐ.ஐ.எம்., உள்ளிட்ட பிசினஸ் ஸ்கூல்களில் சேர, கேட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். நவம்பரில் நடக்கும் தேர்வுக்கு செப்டம்பரில் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரி இறுதியாண்டு முதல் தயாராகி விட வேண்டும். குழு கலந்தாய்வு, தகவல் தொடர்பு திறன்கள் முக்கியம்.
இவ்வாறு, பதிலளித்தனர்.


கேள்வி :  மறு மதிப்பீடு மார்க் சேர்க்கப்படுமா? மறு மதிப்பீட்டுக்குப் பின் கிடைக்கும் புதிய மதிப்பெண் ரேங்க் பட்டியலில் சேர்க்கப்படுமா?


பல மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 15ல்தான் புதிய மதிப்பெண் விவரம் தெரிய வரும். மதிப்பீட்டுக்குப் பின் வெளியாகும் மதிப்பெண் விவரங்கள், அண்ணா பல்கலை கவுன்சிலிங் குழுவினருக்கு தனியாக அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் அப்டேட் செய்யப்படும் என பதிலளித்தார் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us