UPDATED : மே 30, 2011 12:00 AM
ADDED : மே 30, 2011 11:49 AM
அ நிறம் | அளவு
கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 11 பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
கடந்த 2009 - 10ம் ஆண்டில் ஏழு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. இந்த ஆண்டு 18 ஆக உயர்ந்துள்ளது. அதில் 12 அரசு பள்ளிகளும், 6 நிதி உதவி பெறும் பள்ளிகளும் அடங்கும்.
அதேப்போன்று 2009 - 10ம் ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மெட்ரிக் பள்ளிகள் 27. இந்த ஆண்டு அவை 37 மெட்ரிக் பள்ளிகளாக உயர்ந்துள்ளன.
