தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பில் சாதித்த மாணவன் தவிப்பு

10ம் வகுப்பில் சாதித்த மாணவன் தவிப்பு

10ம் வகுப்பில் சாதித்த மாணவன் தவிப்பு


UPDATED : மே 31, 2011 12:00 AM

ADDED : மே 31, 2011 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2011 12:00 AM ADDED : மே 31, 2011 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சந்தப்பேட்டையைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பாபு, 15. இவன், டேனிஷ் மிஷன் பள்ளியில் பயின்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 455 மதிப்பெண் பெற்று பள்ளியில் மூன்றாவது மாணவனாக தேர்வு பெற்றுள்ளான்.


இவனது தாய் அமுதா, வீட்டு வேலை செய்து நான்கு பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். படிப்பில் ஆர்வம் மிகுந்த பாபு, பொறியாளராக வர வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளான். அடுத்து தன்னை எந்த பள்ளியில், யார் சேர்த்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் பாபு கூறுகையில், "பொறியாளராக வேண்டும் என்பது தான் என் குறிக்கோள். பிளஸ் 1 படிப்பை எந்த பள்ளியில் தொடர்வது என தெரியவில்லை. என் தாய் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், என்னை, 10ம் வகுப்புவரை படிக்க வைத்து விட்டார். மிகுந்த பண கஷ்டத்தில் உள்ள நான், இனி எப்படி படிப்பேன் என தெரியவில்லை" என கண்ணீர் மல்க கூறினான்.


படிப்பில் ஆர்வம் இருந்தும் படிக்க வசதியில்லாத இந்த மாணவனின் கனவு மெய்ப்பட உதவிக்கரம் நீட்டுபவர்கள், 97907 19251 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us