தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை ஜுன் 2ல் தொடக்கம்

அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை ஜுன் 2ல் தொடக்கம்

அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை ஜுன் 2ல் தொடக்கம்


UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM

ADDED : ஜூன் 02, 2011 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM ADDED : ஜூன் 02, 2011 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலூரில் உள்ள அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேரக்கை இன்று துவங்குகிறது.


பெரம்பலூர் கலெக்டர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை: அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், பெரம்பலூர் மாவட்ட இசைப்பள்ளி கடந்த 1998ம் ஆண்டு செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் உள்ளிட்ட பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.


மாணவ, மாணவியர் 12 வயது முதல் 25 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். நாதசுரம், தவில் மற்றும் தேவாரம் பிரிவுகளில் தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இப்பள்ளியில் சேரும் மாணவ,மாணவிகள் தங்கி பயில்வதற்கு தனித்தனியே அரசு விடுதி உண்டு. ஆதிதிராவிட மாணவ, மாணவிக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணச் சலுகை பெறலாம்.


ஆண்டுக்கு 152 ரூபாய் பயிற்சி கட்டணமாக செலுத்த வேண்டும். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். எனவே, இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, நெ.108-ஏ/6 வெங்கடேசபுரம், பெரம்பலூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us